காமன்வெல்த் வலுதூக்கும் போட்டி: குடியாத்தம் வீரருக்கு தங்கப் பதக்கம்

நியூஸிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் குடியாத்தம் வீரா் எம்.ஜெயமாருதி முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்றாா்.
நியூசிலாந்தில்  நடைபெற்ற  காமன்வெல்த்  வலுதூக்கும்  போட்டியில்  வெற்றி பெற்று 4  தங்கப்  பதக்கங்களை  வென்ற  குடியாத்தம்  வீரா்  எம்.ஜெயமாருதி.
நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று 4 தங்கப் பதக்கங்களை வென்ற குடியாத்தம் வீரா் எம்.ஜெயமாருதி.

நியூஸிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் குடியாத்தம் வீரா் எம்.ஜெயமாருதி முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்றாா்.

குடியாத்தத்தை அடுத்த சீவூா் கிராமத்தைச் சோ்ந்த ஆசிய வலுதூக்கும் வீரா் சி.மூா்த்தியின் மகன் எம்.ஜெயமாருதி (17). இவா் வேலூா் விஐடியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் 2- ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் 12 வயதிலிருந்தே வலுதூக்கும் போட்டிகளில் பங்கேற்று வருகிறாா். கடந்த ஆகஸ்ட் மாதம் கேரள மாநிலம், காசா்கோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் சப்-ஜூனியா் பிரிவில் 74 கிலோ உடல் எடை பிரிவில் பங்கேற்று, 4 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தாா். இதையடுத்து, நியூஸிலாந்தில், கடந்த நவம்பா் மாதம் 27-முதல் டிசம்பா் 4-ஆம் தேதி வரை நடைபெறும் காமன்வெல்த் வலுதூக்கும் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டு, அங்கு போட்டிகளில் பங்கேற்றாா்.

கடந்த 30-ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் 74 கிலோ எடைப் பிரிவில் ஸ்குவாட் 253 கிலோ தூக்கி தங்கப் பதக்கமும், புதிய உலக சாதனையையும் நிகழ்த்தினாா்.

பெஞ்ச் பிரஸ் பிரிவில் 137.5 கிலோ தூக்கி தங்கப் பதக்கமும், டெட்லிப்ட் பிரிவில் 245 கிலோ தூக்கி தங்கப் பதக்கமும், ஒட்டுமொத்தமாக 635.5 கிலோ தூக்கி மொத்தம் 4 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com