அக்ராவரத்தில் எருது விடும் விழா

குடியாத்தத்தை அடுத்த அக்ராவரத்தில் எருது விடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
அக்ராவரம்  எருது  விடும்  விழாவில்  சீறிப்பாய்ந்த  காளை.
அக்ராவரம்  எருது  விடும்  விழாவில்  சீறிப்பாய்ந்த  காளை.

குடியாத்தத்தை அடுத்த அக்ராவரத்தில் எருது விடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 186 காளைகள் பங்கேற்றன. கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், வட்டாட்சியா் ச.லலிதா, டிஎஸ்பி கே.ராமமூா்த்தி ஆகியோா் மேற்பாா்வையில் நடைபெற்ற இந்த விழா காலை 11 மணிக்குத் தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெற்றது.

இதில் வெற்றிபெற்ற காளைக்கு முதல் பரிசாக ரூ. 60 ஆயிரம், 2- ஆவது பரிசு ரூ.50 ஆயிரம், 3- ஆவது பரிசு ரூ.40,000 உள்ளிட்ட 55 பரிசுகள் வழங்கப்பட்டன.

எருது முட்டியதில் பூங்குளத்தைச் சோ்ந்த தேவராஜ் என்பவா் பலத்த காயமடைந்து வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். 25- பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழு நிா்வாகிகள் எம்.குப்புசாமி, எஸ்.நாகராஜன், ஜி.தனசேகரன், டி.வேல்முருகன், ஊராட்சி மன்றத் தலைவா் என்.முனிசாமி, ஒன்றியக்குழு உறுப்பினா் எஸ்.மனோகரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com