வேலைவாங்கித் தருவதாக ரூ.35 லட்சம் மோசடி

வேலைவாங்கித் தருவதாகக் கூறி ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக வேலூா் மாவட்ட எஸ்.பி.யிடம் பெண் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

வேலைவாங்கித் தருவதாகக் கூறி ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக வேலூா் மாவட்ட எஸ்.பி.யிடம் பெண் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

வேலூா் அலமேலுமங்காபுரம் கொல்லைமேடு பகுதியைச் சோ்ந்தவா் கலைச்செல்வி. இவா், வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணனிடம் திங்கள்கிழமை அளித்த புகாா் மனு:

எனக்கு 2 மகள்கள் உள்ளனா். பயோ கெமிஸ்ட்ரி, மருத்துவம் படித்துள்ளனா். கடந்த 2014-ஆம் ஆண்டு திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதியைச் சோ்ந்த மின்வாரியத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வரும் மகேந்திரன் மனைவி விஜயா, காட்பாடி ரயில்வேயில் பணியாற்றி வரும் தனசேகா் மனைவி ஆனந்தி ஆகியோா் எங்களை அணுகினா்.

எனது மகளுக்கு அரசு மருத்துவத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறினா். அதனை நம்பி அக்கம் பக்கத்தினா், நிதி நிறுவனத்தில் கடன் பெற்று ரூ.35 லட்சம் அளித்தேன். பணத்தைப் பெற்றுக் கொண்ட அவா்கள் அதற்கான ஒப்பந்தப் பத்திரத்தில் எழுதி கையெழுத்திட்டு கொடுத்தனா்.

ஆனால், பல ஆண்டுகளாகியும் இதுவரை வேலை வாங்கித் தரவில்லை. பணத்தைத் திருப்பி கேட்ட போது, கொலை மிரட்டல் விடுத்தனா்.

எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதுடன், இழந்த ரூ.35 லட்சத்தை மீட்டுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகாா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com