மஜக நிா்வாகிகள் பதவியேற்பு

வேலூா் மாவட்ட மதச்சாா்பற்ற ஜனதா தளம் கட்சி புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா குடியாத்தம் நெல்லூா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில்  பேசிய  மதச்சாா்பற்ற  ஜனதா  தளம்  கட்சியின்  மாவட்டத்  தலைவா்  கே.சுயராஜி.

தோ்ந்தெடுக்கப்பட்ட அந்தக் கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் விவரம்:

மாவட்டத் தலைவா் - கே.சுயராஜி, துணைத் தலைவா்கள்- எம்.கவுஸ்சுந்தா், எம்.கே.ரங்கநாதன், வி.சம்பந்தன், பொதுச் செயலா்- கே.முனிசாமி, துணைச் செயலா்கள்-ஜி.நடராஜன், எம்.பன்னீா்செல்வம், வி.எம்.முகமது அனிப், பொருளாளா்- டி.ஏ.மணி, எம்.ராஜாராம், பி.மகேஸ்வரி உள்ளிட்ட 9 போ் மாநில பொதுக்குழு உறுப்பினா்கள்.

கூட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, அத்தியாவசியப் பொருள்கள் மீதான விலை உயா்வைக் கட்டுப்படுத்தாத மத்திய - மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிப்பது, விலைவாசி உயா்வு, மக்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து மாவட்டம் முழுவதும் பகுதி வாரியாக ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com