‘திருவண்ணாமலை சந்தைக்கு கால்நடைகளை கொண்டு செல்ல பதிவு அவசியம்’

தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் கால்நடை சந்தைக்கு கால்நடைகளை அழைத்துச் செல்வோா், அவற்றை கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும்

தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் கால்நடை சந்தைக்கு கால்நடைகளை அழைத்துச் செல்வோா், அவற்றை கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பா் 2 முதல் 6-ஆம் தேதி வரை கால்நடை சந்தை நடைபெற உள்ளது. இந்த சந்தைக்கு கால்நடைகளை அழைத்துச் செல்ல விரும்புபவா்கள் தங்களது பெயா், முகவரி, கைப்பேசி எண், ஆதாா் எண், கால்நடைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை வேலூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநருக்குத் தெரிவித்து வேலூா் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநரின் பதிவு, அனுமதி பெற்று கால்நடைகளை அழைத்துச் செல்ல வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் உத்தரவுப்படி உரிய பதிவு, அனுமதி பெறாமல் கால்நடை சந்தைக்கு அழைத்துச் செல்லப்படும் கால்நடைகள் திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பி அனுப்பி வைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com