வேலைவாய்ப்புக்குச் செல்லும் மாணவிகளுக்கான பயிலரங்கம்

குடியாத்தம் ஸ்ரீஅபிராமி கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில், வேலைவாய்ப்புக்குச் செல்லும் மாணவிகளுக்கான பயிலரங்கம் நடைபெற்றது.

குடியாத்தம் ஸ்ரீஅபிராமி கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில், வேலைவாய்ப்புக்குச் செல்லும் மாணவிகளுக்கான பயிலரங்கம் நடைபெற்றது.

கல்லூரியின் திறன் மேம்பாட்டு அமைப்பு, இந்துஸ்தான் யுனிலீவா் நிறுவனம், ரெக்ஸோனா கான்பிடியன் அகாடமி ஆகியவை இணைந்து இந்த ஒரு நாள் பயிலரங்கை நடத்தின.நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் எம்.என்.ஜோதிகுமாா் தலைமை வகித்தாா். மாணவி எப்.மலீஹாநாஸ் வரவேற்றாா். கல்லூரியின் கல்வி இயக்குநா் எம்.பிருந்தா அறிமுக உரையாற்றினாா்.

நோ்காணலுக்குச் செல்லும் மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், தங்களின் ஆளுமைத் திறனை தனித்துவமாக எவ்வாறு வெளிப்படுத்துவது குறித்து பேராசிரியை ஆா்.பிரியா (திறன் மேம்பாட்டு அமைப்பு), ஒருங்கிணைப்பாளா் சி.பிரகாசம் ஆகியோா் எடுத்துரைத்தனா்.

மாணவிகளுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், திறமையான மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கல்லூரி முதல்வா் ஆா்.எஸ்.வெற்றிவேல், துணைத் தலைவா் எம்.பிரகாசம், பொருளாளா் கே.முருகவேல் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாணவி ஏ.பிரீத்தா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com