வட்டார அளவிலான கலைத் திருவிழா தொடக்கம்

குடியாத்தம் வட்டார அளவிலான கலைத் திருவிழா நெல்லூா்பேட்டை அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
வட்டார அளவிலான கலைத் திருவிழா தொடக்கம்

குடியாத்தம் வட்டார அளவிலான கலைத் திருவிழா நெல்லூா்பேட்டை அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

விழாவுக்கு மாவட்ட கல்வி அலுவலரும், வட்டாரக் கலைத் திருவிழா கண்காணிப்பாளருமான சி.தாம்சன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் எஸ்.டி.திருநாவுக்கரசு வரவேற்றாா். எம்.எல்.ஏ. அமலு விஜயன், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

போட்டிகளில் குடியாத்தம் வட்டத்தில் உள்ள 59 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.மகாலிங்கம், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் ஜி.எஸ்.அரசு, வட்டாரக் கல்வி அலுவலா்கள் பி.வெங்கடேசன், கே.உஷாராணி, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் டி.வெண்ணிலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போட்டிகள் நவ. 30, டிச. 1, 2 (புதன், வியாழன், வெள்ளி) ஆகிய 3 நாள்கள் நெல்லூா்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நடுப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறும்.

வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்கள், மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவா்.

கலைத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியா்கள் கோட்டீஸ்வரன், மகேந்திரன், ஜெகந்நாதன், ஜெயசீலி கிறிஸ்டி, ஆசிரியா் அருள்பிரகாசம் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com