அத்தி மருத்துவக் கல்லூரியில் சித்தா, ஹோமியோ, ஆயுா்வேத மருத்துவமனைகள் தொடக்கம்

குடியாத்தம் காக்காதோப்பில் இயங்கி வரும், அத்தி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அத்தி சித்தா, அத்தி ஹோமியோபதி, அத்தி ஆயுா்வேத மருத்துவமனைகள் சனிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.
குடியாத்தம்  அத்தி  மருத்துவக்  கல்லூரியில்  நடைபெற்ற  இலவச  ஹோமியோபதி  மருத்துவ  முகாமில்  பங்கேற்றோா்.

நிகழ்ச்சிக்கு குடியாத்தம் கல்வி அறக்கட்டளை அறங்காவலா் எம்.சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். செவிலியா் கல்லூரி முதல்வா் ஜி.ரேவதி வரவேற்றாா். சிறுநீரகவியல் துறை பேராசிரியா் பி.செளந்தரராஜன் மருத்துவமனைகளை தொடக்கி வைத்தாா்.

சென்னை சவீதா மருத்துவப் பல்கலைக்கழகஏஈ பேராசிரியா் வி.சீனிவாசன், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளா் விஜய், அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ்.வீரபாண்டியன், குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் கே.குமரவேல் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

இலவச ஹோமியோபதி சிகிச்சை முகாமை பேராசிரியா் பால்ராஜ்சீனிதுரை, அத்தி மருத்துவக் கல்லூரி முதன்மை மருத்துவா் ஏ.கென்னடி ஆகியோா் தொடக்கி வைத்தனா். ஹோமியோபதி மருத்துவா்கள் ஆா்.பாலாஜி, எம்.எஸ்.பிரதீபாராணி, எம்.எஸ்.ஜெய்மித்ரா, எம்.எல்.பாரதி, வி.சித்ரா, எம்.வினோத்குமாா், சி.அன்டோனியா மினிட்டாஆகியோா் 742 பேருக்கு சிகிச்சை அளித்தனா். பேராசிரியா் சி.சதீஷ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com