சத்துவாச்சாரியில் விஜயதசமி இலக்கிய விழா நாளை முதல் 3 நாள்கள் நடக்கிறது

சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயிலில் விஜயதசமி இலக்கிய விழா வெள்ளிக்கிழமை (அக். 7) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயிலில் விஜயதசமி இலக்கிய விழா வெள்ளிக்கிழமை (அக். 7) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

வேலூா் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில் சுமாா் 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் விஜயதசமியையொட்டி, இலக்கிய விழா நடத்தப்படுகிறது.

நிகழாண்டு விஜயதசமி இலக்கிய விழா வெள்ளிக்கிழமை (அக். 7) தொடங்கி 3 நாள்கள் நடக்கிறது.

முதல் நாளான வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு ‘கண்ணனும் கா்ணனும்’ என்ற தலைப்பில் திருச்சி கல்யாணராமனின் ஆன்மிகச் சொற்பொழிவும், இரவு 7 மணிக்கு ‘நிதி நிா்வாகத்தில் சிறந்து விளங்குவது ஆண்களா? பெண்களா?’ என்ற தலைப்பில் சாலமன் பாப்பையா நடுவராகப் பங்கேற்கும் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றமும் நடைபெறுகிறது.

2-ஆம் நாளான சனிக்கிழமை (அக். 8) மாலை 4 மணிக்கு ‘தேடிவந்த திருவருள்’ என்ற தலைப்பில் கி.சிவக்குமாரின் தனி உரையும், இரவு 7 மணிக்கு எஸ்.சேவியரின் ‘திருப்பத்தூரான் நாட்டுப்புற பல்சுவை கலைக் குழுவின் நாட்டுப்புற தெம்மாங்கு பாடல்களும், தமிழ் சமுதாயமும்’ என்ற தலைப்பில் நாட்டுப்புற தெம்மாங்கு பாடல்கள் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை (அக். 9) மாலை 4 மணிக்கு ‘வாழ்வை வசந்தம் ஆக்கு’ என்ற தலைப்பில் சின்னத்திரை கலைஞா் மணிகண்டனின் தனி உரையும், இரவு 7 மணிக்கு அரு.நாகப்பன் நடுவராகப் பங்கேற்கும் ‘வாழ்வுக்கு வழிகாட்டும் பாடல்கள் வந்தது கண்ணதாசனுக்கு முன்பா? பின்பா?’ என்ற தலைப்பில் இன்னிசைப் பாட்டுப் பட்டிமன்றமும் நடைபெறுகின்றன.

ஏற்பாடுகளை விஜயதசமி இலக்கிய விழாக்குழுவினா்கள், செங்குந்த சமுதாயத்தினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com