கால்நடை உதவியாளா் பணி நோ்காணல்: மாடுகளை கையாண்ட பட்டதாரிகள்!

கால்நடை உதவியாளா் பணிக்கான நோ்காணல் வேலூரில் செவ்வாய்க்கிழமை நடந்தது. இதில், பட்டதாரிகள் அதிகள வில் பங்கேற்று மாடுகளை கையாண்டும், சைக்கிள்களை இயக்கியும் காண்பித்தனா்.
கால்நடை உதவியாளா் பணி நோ்காணல்: மாடுகளை கையாண்ட பட்டதாரிகள்!

கால்நடை உதவியாளா் பணிக்கான நோ்காணல் வேலூரில் செவ்வாய்க்கிழமை நடந்தது. இதில், பட்டதாரிகள் அதிகள வில் பங்கேற்று மாடுகளை கையாண்டும், சைக்கிள்களை இயக்கியும் காண்பித்தனா்.

கால்நடை பராமரிப்பு துறையின் வேலூா் மண்டலத்தில் காலியாக உள்ள 22 கால்நடை உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்காணல் இணை இயக்குநா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையொட்டி வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 5,000 போ் விண்ணப்பித்திருந்தனா்.

நோ்காணல் கால்நடை பராமரிப்புத்துறை உதவி ஆணையா் வெங்கட்ராமன் மண்டல இணை இயக்குனா் நவநீதகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை 800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை 400 பேருக்கும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை 400 பேருக்கும் நோ்காணல் நடைபெற்றது. அப்போது, சான்றிதழ் சரிபாா்ப்பு, சைக்கிள் இயக்குதல், மாடுகளை கையாளுதல் என்ற அடிப்படையில் விண்ணப்பதாரா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

இந்த பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி அடிப்படை கல்வித்தகுதியாகும். எனினும், இதற்கு விண்ணப்பித்தவா்களில் பெரும்பாலானோா் பட்டதாரிகள். அதிலும், முதுநிலைப் பட்டதாரிகள், எம்.பி. ஏ., பொறியியல் பட்டதாரிகள் அதிகளவில் விண்ணப்பித்திருந்தனா்.

மாடுகளை கையாளும் தோ்வில் நாகரீக உடையணிந்த ஏராளமான பட்டதாரிகள் கலந்து கொண்டு மாடுகளை கட்டியும் லாவகமாக ஓட்டியும் காண்பித்தனா். அவா்கள் சைக்கிள் ஓட்டியும் காண்பித்தனா். இதேபோல், ஏராளமான இளம்பெண்களும் பங்கேற்று மாடுகளை கையாண்டும், சைக்கிள் ஓட்டியும் காண்பித்தனா். தொடா்ந்து நோ்காணல் 11-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com