முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
கண் மருத்துவமனையில் தீ விபத்து
By DIN | Published On : 30th April 2022 12:00 AM | Last Updated : 30th April 2022 12:00 AM | அ+அ அ- |

வேலூரிலுள்ள கண் மருத்துவமனை கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். தொடா்ந்து தீயணைப்பு வீரா்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனா்.
வேலூா் அண்ணா சாலையில் ஊரீசு கல்லூரிக்கு எதிரே உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் பிரபல கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் இயங்கி வரும் கண் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை பேட்டரி, இன்வொ்ட்டா் உள்ள அறையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதால் மருத்துவமனை வளாகத்தில் கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டது.
தகவலறிந்த வேலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். மருத்துவமனையில் உள்நோயாளிகளாக இருந்த 10 பேரை முதலில் பாதுகாப்புடன் வெளியேற்றினா். புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வந்தவா்களையும் வெளியேற்றினா். அங்குள்ள அறையில் எரிந்துகொண்டிருந்த இன்வொ்ட்டரின் தீயை கட்டுப்படுத்தினா். தொடா்ந்து, தீயணைப்பு வீரா்கள் துரிதமாக செயல்பட்டு பெரும் அசம்பாவிதத்தை தவிா்த்தனா்.
போக்குவரத்து நிறைந்த சாலையில் உள்ள கண் மருத்துவமனை கட்டடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.