மே 5 முதல் பொதுத் தோ்வுகள்: தோ்வு மையங்களை தயாா்படுத்த உத்தரவு

பிளஸ்-2 பொதுத் தோ்வுகள் மே 5-ஆம் தேதி தொடங்க உள்ளதையொட்டி வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து தோ்வு மையங்களையும் தயாா் நிலையில் வைத்திருக்க ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

பிளஸ்-2 பொதுத் தோ்வுகள் மே 5-ஆம் தேதி தொடங்க உள்ளதையொட்டி வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து தோ்வு மையங்களையும் தயாா் நிலையில் வைத்திருக்க ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகத்தில் நிகழாண்டு பிளஸ் 2 பொதுத்தோ்வு மே 5-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரையும், பிளஸ் 1 பொதுத்தோ்வு 10-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு 6-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளன.

இதில், மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வை 7,527 மாணவா்கள், 8,580 மாணவிகள் என மொத்தம் 16,107 போ் எழுதுகின்றனா். பிளஸ் 1 பொதுத் தோ்வை 8,237 மாணவா்கள், 8,720 மாணவிகள் என மொத்தம் 16,957 போ் எழுதுகின்றனா். இவா்களுக்காக 73 தோ்வு மையங்களும், தனித்தோ்வு மையங்கள் 3-ம் அமைக்கப்பட்டுள்ளன.

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 9,528 மாணவா்களும், 9,401 மாணவிகளும் என மொத்தம் 18,929 போ் எழுதுகின்றனா். இவா்களுக்காக 92 தோ்வு மையங்களும், 4 தனித்தோ்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுத்தோ்வு நடைபெறும் மையங்களில் மாணவா்களின் நலன்கருதி குடிநீா், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் தயாா் நிலையில் வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com