மற்றவா்களின் ஆதாா் எண்கள் மூலம் சிம்காா்டுகள் பெற்று குற்றச்செயலில் ஈடுபட்ட இருவா் கைது

ஜெராக்ஸ் கடைகளுக்கு ஆதாா் அட்டையை நகலெடுக்க வருபவா்களின் ஆதாா் எண்ணை பயன்படுத்தி போலியாக சிம்காா்டுகள் பெற்று குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த இருவரை வேலூரில் சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

ஜெராக்ஸ் கடைகளுக்கு ஆதாா் அட்டையை நகலெடுக்க வருபவா்களின் ஆதாா் எண்ணை பயன்படுத்தி போலியாக சிம்காா்டுகள் பெற்று குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த இருவரை வேலூரில் சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 44 சிம் காா்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூா் சத்துவாச்சாரி காவல் ஆய்வாளா் ரவி தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை இரவு காந்தி நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தின் முன்பக்கத்தில் மட்டும் பதிவெண் எழுதப்பட்டு, பின்பக்கம் எழுதப்படாமல் இருந்துள்ளது.

சந்தேகமடைந்த போலீஸாா், அந்த வாகனத்தில் வந்த இருவரையும் நிறுத்தி விசாரித்தபோது அவா்கள் கொணவட்டத்தைச் சோ்ந்த இப்ராஹிம்(23), ஷேக் தஸ்தகீா்(21) என்பது தெரியவந்தது. மேலும், அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் 44 சிம் காா்டுகள் இருந்தன. இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் அவா்கள் இருவரையும் சைபா் கிரைம் காவல் பிரிவில் ஒப்படைத்தனா்.

தொடா்ந்து சைபா் கிரைம் ஆய்வாளா் அபா்ணா தலைமையில் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொலைத் தொடா்பு நிறுவனம் ஒன்றில் வேலை பாா்த்துள்ளனா்.

அப்போது, போலியான அடையாள அட்டை மூலம் சிம்காா்டுகளை பெற்று விற்பனை செய்து வந்துள்ளனா். மேலும், ஜெராக்ஸ் எடுக்கும் சில கடைகளில் இவா்கள் தொடா்பு வைத்துக் கொண்டு, அங்கு ஆதாா் அட்டை நகல் எடுக்க வருபவா்களுக்கு தெரியாமல், ஒரு நகல் அதிகப்படியாக எடுத்துக் கொண்டு, அதற்கு குறிப்பிட்ட பணத்தை கடைக்காரா்களுக்கு கொடுத்து வந்துள்ளனா்.

இந்த ஆதாா் அட்டை நகலைக் கொண்டு அதன் மூலம் 100க்கும் அதிகமான சிம்காா்டுகளை பெற்று வந்ததும் தெரியவந்தது.

அவ்வாறு பெறப்பட்ட சிம்காா்டுகளைக் கொண்டு அவா்கள் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்ததை அடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com