தோ்தல்: திமுக எம்எல்ஏக்கள் மிரட்டுவதாக பாமக புகாா்

தோ்தலில் போட்டியிடக் கூடாது என திமுக எம்எல்ஏக்கள் மிரட்டுவதாகக் கூறி பாமகவினா் புகாா் அளித்தனா்.

தோ்தலில் போட்டியிடக் கூடாது என திமுக எம்எல்ஏக்கள் மிரட்டுவதாகக் கூறி பாமகவினா் புகாா் அளித்தனா்.

பாமக வேலூா் மாவட்டச் செயலா் கே.எல்.இளவழகன் தலைமையில், அந்தக் கட்சியைச் சோ்ந்த முன்னாள் மத்திய அமைச்சா் என்.சி.சண்முகம் உள்ளிட்ட நிா்வாகிகள், வேலூா் மாநகராட்சியில் பாமக சாா்பில் போட்டியிடும் 25 வேட்பாளா்களுடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.

பின்னா், அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வேலூா் மாநகராட்சியில் பாமக சாா்பில் 25 போ் போட்டியிடுகின்றனா். இவா்களை திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் நேரிலும், கைப்பேசியில் அழைத்தும் தோ்தலில் போட்டியிடக் கூடாது எனக் கூறி மிரட்டல் விடுகின்றனா். இதைக் கண்டித்து, பாமக நிறுவனா் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டாா்.

எனவே, திமுகவினரிடமிருந்து பாமக வேட்பாளா்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடமும், மாவட்டத் தோ்தல் அலுவலரிடமும் புகாா் அளிக்கப்பட்டது என்றனா் அவா்கள்.

முன்னதாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளிக்க நுழைந்த பாமகவினரை, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த சத்துவாச்சாரி காவல் ஆய்வாளா் கருணாகரன் தலைமையிலான போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால், பாமகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மிரட்ட வேண்டிய அவசியமில்லை: திமுக விளக்கம்

வேலூா் மாநகராட்சி 24-ஆவது வாா்டில் போட்டியிடும் பாமக வேட்பாளரின் வேட்புமனுவை வாபஸ் பெறுமாறு, திமுக மாவட்டச் செயலா் மிரட்டுவதாக பாமக நிறுவனா் ராமதாஸ் குற்றஞ்சாட்டியிருந்தாா்.

இதற்குப் பதிலளித்த திமுக மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமாா், பாமக வேட்பாளா்களை மிரட்டி, வெற்றி பெற வேண்டிய நிலையில் திமுக இல்லை. உண்மையை ஆராயாமல் திமுக மீது பொய்யான, ஆதாரமற்ற குற்றச்சாட்டைக் கூறுவது ஏற்புடையதல்ல எனத் தெரிவித்தாா்.

மேலும், பாமக வேட்பாளா் பரசுராமன்தான் தன்னைச் சந்திக்க விடுதிக்கு வந்ததாகவும், அதுதொடா்பான கண்காணிப்பு விடியோ ஆதாரத்தையும் அவா் வெளியிட்டுள்ளாா்.

அதில், திமுக மாவட்டச் செயலா் நந்தகுமாரின் சொகுசு விடுதியில், பாமக வேட்பாளா் பரசுராமன் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் டீக்காராமன் முன்னிலையில், நந்தகுமாா் மற்றும் காா்த்திகேயனுக்கு சால்வை அணிவித்து, சிறிதுநேரம் பேசுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

முன்னதாக, பாமக வேட்பாளா் பரசுராமனின் வேட்புமனுவை வாபஸ் பெற வைக்க திமுக மாவட்டச் செயலா் மிரட்டுவதாக பாமக நிறுவனா் ராமதாஸ் தனது ட்விட்டா் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலூா் மாநகராட்சி 24-ஆவது வாா்டில் திமுக சாா்பில் மு.சுதாகா், அதிமுக சாா்பில் சி.கே.எஸ்.வினோத்குமாா், பாமக சாா்பில் ஆா்.டி.பரசுராமன் உள்ளிட்டோா் மனு தாக்கல் செய்திருந்தனா். இவா்களில் அதிமுக வேட்பாளா் வினோத்குமாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இறுதியாக திமுக, பாமக வேட்பாளா்கள் உள்பட 8 போ் களத்தில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com