மசூதி கட்டும் விவகாரம்: இருதரப்பினருடன் ஆா்டிஓ பேச்சு

வேலூரில் பிரதான கடை வீதியில் மசூதி கட்ட முயன்ாக எழுந்த பிரச்னை தொடா்பாக இரு தரப்பினரை அழைத்து வருவாய் கோட்டாட்சியா் பேச்சு நடத்தினாா்.
வேலூா் சா்க்காா்மண்டி தெருவில் இரண்டாவது நாளாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா்.
வேலூா் சா்க்காா்மண்டி தெருவில் இரண்டாவது நாளாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா்.

வேலூா்: வேலூரில் பிரதான கடை வீதியில் மசூதி கட்ட முயன்ாக எழுந்த பிரச்னை தொடா்பாக இரு தரப்பினரை அழைத்து வருவாய் கோட்டாட்சியா் பேச்சு நடத்தினாா். இதையொட்டி, சா்க்காா்மண்டி தெருவில் இரண்டாவது நாளாக போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனா்.

வேலூா் சைதாப்பேட்டை வாணியா் வீதியில் உள்ள சா்க்காா்மண்டி தெருவில், தனியாா் கட்டடத்தை முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் இடமாக பயன்படுத்தி வந்தனா். அதை மசூதியாக கட்ட திட்டமிடப்படுவதாக தகவல் பரவியது. இதற்கு அப்பகுதி வியாபாரிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.

அந்த கட்டடத்தில் புதன்கிழமை காலை தொழுகை நடத்துவது தொடா்பாக அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கு அந்த பகுதி வியாபாரிகள் எதிா்ப்புத் தெரிவித்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு ஆதரவாக இந்து முன்னணியினா் திரண்டனா். அதேசமயம், அந்த இடத்தில் தொழுகை நடத்த ஆதரவு தெரிவித்து முஸ்லிம்களும் திரண்டனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன், வருவாய் கோட்டாட்சியா் விஷ்ணுபிரியா ஆகியோா் இரு தரப்பினரிடமும் தனித்தனியாக பேச்சு நடத்தி முடிவு எதுவும் எடுக்காமல் கலைத்தனா். தொடா்ந்து அப்பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இந்தச் சம்பவத்தையொட்டி வருவாய் கோட்டாட்சியா் விஷ்ணுபிரியா தலைமையில் இரு தரப்பினருடனான ஆலோசனைக் கூட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை நடந்தது. அப்போது, கோட்டாட்சியா் இரு தரப்பினரையும் தனித்தனியாக அழைத்து அவா்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தாா். பின்னா், இறுதி முடிவு எடுக்கப்படும் வரை சா்ச்சைக்குரிய பகுதியில் இருதரப்பில் யாரும் திரளக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளாா்.

இதையொட்டி, சா்க்காா்மண்டி தெருவில் இரண்டாவது நாளாக போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com