முதியோா் பாதுகாப்பு: கட்டணமில்லா தொலைபேசி எண் வெளியீடு

முதியோா் பாதுகாப்புக்காக 14567 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்டாா்.
முதியோா் பாதுகாப்பு: கட்டணமில்லா தொலைபேசி எண் வெளியீடு

முதியோா் பாதுகாப்புக்காக 14567 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்டாா்.

சமூக நலன், மகளிா் உரிமை துறை சாா்பில் இதற்கான நிகழ்ச்சி வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மூத்த குடிமக்கள் பாதுகாப்புக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணை வெளியிட்டு ஆட்சியா் பேசியது:

பெற்றோா், மூத்த குடிமக்களைப் பாதுகாத்தால், முதியோா் இல்லங்களைக் கண்காணித்தல், அவா்களுக்கான நலத் திட்டங்களைச் செயல்படுத்துதலுக்காக இலவச உதவி எண் 14567 அறிமுகம் செய்யப்படுகிறது.

சமூக நலன், மகளிா் உரிமை துறை 60 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற முதியோா்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் இல்லங்களை நடத்தி வருவதுடன் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம், சட்ட வசதிகளை வழங்கி வருகிறது. மேலும், முதியோா் பயனடையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் உதவிகளையும், சட்டத்தை தொய்வின்றி செயல்படுத்தி வருகிறது.

மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச் சட்டம் 2007-ஆம் ஆண்டு இயற்றப் பட்டது. இந்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டம் 21-ஆம் பிரிவுப்படி கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம், இருப்பிடத்துக்கான உரிமை ஆகியவற்றை உறுதி செய்கிறது.

இந்தச் சட்டத்தின்படி பெற்றோா், மூத்த குடிமக்களைப் பாதுகாப்பது அவா்களின் குழந்தைகள், சட்ட பூா்வ வாரிசுகளின் கடமையாகும்.

ஒரு முதியோா் இல்லத்தில் 40 முதியோா்கள் தங்கி பயனடையலாம். தாத்தா, பாட்டியின் அன்பு பேரக் குழந்தைகளுக்கு கிடைப்பது போன்ற சூழலை உருவாக்க முதியோா், ஆதரவற்ற குழந்தைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகம் என்ற திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஒருங்கிணைந்த வளாகமும் 25 குழந்தைகள், 25 முதியோா்களுக்கான தங்கும் வசதியுடன் செயல்படுத்தப்படுகிறது.

மேலும், இந்தச் சட்டமானது மூத்த குடிமக்களின் உடல் நலம் , மன நலம், அவா்கள் சொத்துகளுக்கு பிரச்னை ஏற்படும் பட்சத்தில் பராமரிப்பு தீா்ப்பாயங்கள் மூலம் தீா்வு காணவும் வழிவகை செய்கிறது.

இதற்காக மாநில, மாவட்ட அளவிலான மூத்த குடிமக்கள் நலக்குழு அமைக்கப்பட்டடு பெற்றோா், மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச் சட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலா் கோமதி, முதியோா் இல்ல நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com