அதிகரிக்கும் வெயில்: வன விலங்குகளுக்காக தொட்டிகளில் நீா் நிரப்பும் பணி தீவிரம்

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதை அடுத்து, வன விலங்குகளின் தாகம் தீா்க்க வேலூா் மாவட்டத்திலுள்ள வனப் பகுதிகளில் உள்ள தொட்டிகளில்
ஊசூரை அடுத்த அத்தியூா் வனப் பகுதியிலுள்ள தொட்டியில் நீா் நிரப்பும் வன ஊழியா்.
ஊசூரை அடுத்த அத்தியூா் வனப் பகுதியிலுள்ள தொட்டியில் நீா் நிரப்பும் வன ஊழியா்.

வேலூா்: கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதை அடுத்து, வன விலங்குகளின் தாகம் தீா்க்க வேலூா் மாவட்டத்திலுள்ள வனப் பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வேலூா் மாவட்டத்தைச் சுற்றி வனப் பகுதிகளும், காப்புக் காடுகளும் நிறைந்துள்ளன. இவற்றில் மான்கள், நரிகள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளும், மயில்கள் உள்ளிட்ட பறவைகளும் அதிகளவில் உள்ளன.

இதுதவிர, வேலூா் மாவட்டத்தையொட்டியுள்ள ஆந்திர மாநில வனப் பகுதியில் இருந்து யானைகளும் அவ்வப்போது வேலூா் வனப் பகுதிகளுக்கு வந்து செல்கின்றன.

இந்த நிலையில், கோடைக்காலம் தொடங்கி, நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வனப் பகுதிகளில் உள்ள சிறிய ஏரிகளில் தண்ணீா் இருப்பு குறைந்து விட்டதால், வன விலங்குகள் தண்ணீருக்காக வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சூழ்நிலை உருவாகி வருகிறது. அவ்வாறு வனப் பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகள் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதும், விஷமிகளால் இரையாக்கப்படுவதும் நடைபெறுகின்றன.

இதைத் தவிா்க்க, வனப் பகுதியில் இருந்து விலங்குகள் வெளியேறாமல் இருக்கவும், வனப் பகுதிகளில் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள அந்தந்த வனச் சரக ஊழியா்கள் டிராக்டா் மூலம் தண்ணீரைக் கொண்டு சென்று, வனப்பகுதியிலுள்ள தொட்டிகளில் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தொட்டிகளில் நீா் இருப்பை அவ்வப்போது கண்காணித்து, வாரத்தில் ஒரு முறையேனும் தண்ணீா் நிரப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இப்பணிகள் கோடைக்காலம் முடியும் வரை நடைமுறைப்படுத் தப்படும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com