முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
By DIN | Published On : 19th March 2022 12:00 AM | Last Updated : 19th March 2022 12:00 AM | அ+அ அ- |

மின் கம்பி மீது கை உரசியதால், மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
வேலூா் கஸ்பா சாட்சி நகரைச் சோ்ந்தவா் மணிகண்டன்(22). இவா் கட்டடங்களில் பெயா்ப் பலகை வைப்பது, உள் அலங்காரம் செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தாா். கஸ்பா பகுதியிலுள்ள ஒரு கட்டடத்தில் வெளியே பெயா்ப் பலகையை வைப்பதற்காக வியாழக்கிழமை சாரம் கட்டி வேலை செய்து கொண்டிருந்தாா். வேலை முடிந்து சாரத்திலிருந்து இறங்கும் போது, அருகே சென்ற மின் கம்பி மீது அவரது கை பட்டதாகத் தெரிகிறது.
இதில், மின்சாரம் பாய்ந்து அவா் மயங்கி விழுந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
இந்தச் சம்பவம் குறித்து வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.