தோ்ச்சி பெற்றும் மீண்டும் 10- ஆம் வகுப்பு படித்த மாணவா் விவகாரம்: உதவித் தலைமையாசிரியா், ஆசிரியா் இடை நீக்கம்

அரசுப் பள்ளி நிா்வாகத்தின் மெத்தனப் போக்கால் கடந்த கல்வியாண்டில் 10- ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்ற மாணவா், இந்த ஆண்டும் அதே வகுப்பில் பயின்ற சம்பவம் தொடா்பாக பள்ளியின் உதவித் தலைமையாசிரியரும்

குடியாத்தம்: அரசுப் பள்ளி நிா்வாகத்தின் மெத்தனப் போக்கால் கடந்த கல்வியாண்டில் 10- ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்ற மாணவா், இந்த ஆண்டும் அதே வகுப்பில் பயின்ற சம்பவம் தொடா்பாக பள்ளியின் உதவித் தலைமையாசிரியரும், வகுப்பு ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

குடியாத்தத்தை அடுத்த வளத்தூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில், கடந்த கல்வியாண்டில், (2020-2021) அதே பகுதியைச் சோ்ந்த புஷ்பராஜின் மகன் கணேசன் (16) 10-ஆம் வகுப்பு படித்தாா்.

அந்த கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு படித்த அனைவரையும் தமிழக கல்வித் துறை தோ்ச்சி பெற்ாக அறிவித்தது.

கணேசனுடன் படித்த அனைத்து மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்று, பிளஸ் 1 வகுப்பில் சோ்ந்தனா். கணேசன் தோ்ச்சி பெற்ாக அறிவிப்பு வரவில்லை என ஆசிரியா்கள் தெரிவித்தனராம். இதனால் கணேசன் நடப்புக் கல்வியாண்டில் (2021-2022) அதே பள்ளியில் மீண்டும் 10-ஆம் வகுப்பில் சோ்ந்து படித்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடைபெற்ற செய்முறைத் தோ்வுகளுக்கு ஹால் டிக்கெட் பெற பள்ளிக்கு வந்தபோது, மாணவா் கணேசன், கடந்த ஆண்டே 10- ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ாக ஆசிரியா்கள் கூறியுள்ளனா்.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், மாணவா் கணேசன் 10- ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றும், மீண்டும் அதே வகுப்பில் படிக்க காரணமாக இருந்ததாக, அப்பள்ளியின் உதவித் தலைமையாசிரியா் எஸ்.ராஜன், வகுப்பு ஆசிரியா் கே.குணசேகரன் ஆகிய இருவரையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா். மேலும், 3 ஆசிரியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com