வேலூரில் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

மாற்றுத் திறனற்ற பலா் போலியாக ஆவணங்கள் தயாரித்து அடையாள அட்டை பெற்று நிதியுதவி, ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் பெற்று வருவதாகக் கூறி, மாற்றுத் திறனாளிகள் வேலூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோபால ராஜேந்திரன், மாவட்ட பொருளாளா் வீரபாண்டி யன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச் செயலா் நம்புராசன் பங்கேற்று கண்டன உரையாற்றினாா்.

அப்போது, போலி ஆவணங்கள் அளித்து சலுகைகள் பெறுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலியான அடையாள அட்டைகளைக் கண்டறிந்து தடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில், சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com