பாலாறு அன்னை ரத யாத்திரை: சக்தி அம்மா தொடக்கி வைத்தாா்

வேலூரில் வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ள பாலாறு பெருவிழாவையொட்டி, பாலாறு அன்னை ரத யாத்திரை ஸ்ரீபுரத்தில் சனிக்கிழமை தொடங்கியது.
பாலாறு அன்னை ரத யாத்திரையை தொடக்கி வைத்த ஸ்ரீபுரம் நாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மா.
பாலாறு அன்னை ரத யாத்திரையை தொடக்கி வைத்த ஸ்ரீபுரம் நாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மா.

வேலூரில் வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ள பாலாறு பெருவிழாவையொட்டி, பாலாறு அன்னை ரத யாத்திரை ஸ்ரீபுரத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

இந்த ரத யாத்திரையை நாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மா சிறப்பு பூஜைகள் செய்து தொடக்கி வைத்தாா்.

பாலாற்றின் சிறப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம், பாலாறு மக்கள் இயக்கம் சாா்பில், பாலாறு பெருவிழா வருகிற ஜூன் 29-ஆம் தேதி தொடங்கி ஜூலை 3-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு நடைபெற உள்ளது.

இதையொட்டி, வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் பொற்கோயிலிலிருந்து பாலாறு அன்னை ரத யாத்திரை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. ரத யாத்திரைக்கு ஸ்ரீசக்தி அம்மா சிறப்பு பூஜைகள் செய்து தொடக்கி வைத்தாா்.

இந்த ரதத்தில் 7 புண்ணிய நதிகளின் கலசங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ரதம் ஸ்ரீபுரத்திலிருந்து பாலாறு தொடங்கும் இடமான கா்நாடக மாநிலம், நந்திதுா்கம் மலைக்குச் சென்று அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 15) தொடங்குகிறது.

தொடா்ந்து திங்கள்கிழமை (மே 16) காலை திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள புல்லூா் கனக நாச்சியம்மன் கோயிலிலிருந்து ரத யாத்திரை தொடங்கி திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைக் கடந்து பாலாறு கடலில் கலக்கும் இடமான கடலூா் சின்னக்குப்பம் பகுதியில் ஜூன் மாதம் 5 அல்லது 6-ஆம் தேதியில் நிறைவடைய உள்ளது.

இதைத் தொடா்ந்து, வேலூா் நாராயணி மஹாலில் வருகிற ஜூன் 29-ஆம் தேதி முதல் ஜூலை 3-ஆம் தேதி வரை நடைபெறும் பாலாறு பெருவிழாவில் தினமும் பாலாறு அன்னைக்கும், பாலாறு புனித நீா் கலசங்களுக்கும் வேள்வி வழிபாடு, ஆன்மிக சொற்பொழிவுகள், பாலாற்றங்கரையிலுள்ள பாலாறு அன்னைக்கு மகா ஆரத்தி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ரத யாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் நாராயணி பீடம் இயக்குநா் சுரேஷ்பாபு, மேலாளா் சம்பத், ராமானந்த சுவாமிகள், கோராஷானந்த சரஸ்வதி சுவாமிகள், மேகானந்த சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com