பெண்கள் நல விழிப்புணா்வு கருத்தரங்கம்

குடியாத்தம் கே.எம்.ஜி. கலைக் கல்லூரியில் உலக பெண் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, பெண்கள் நல விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது 
பெண்கள் நல விழிப்புணா்வு கருத்தரங்கம்

குடியாத்தம் கே.எம்.ஜி. கலைக் கல்லூரியில் உலக பெண் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, பெண்கள் நல விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது 

ரோட்ராக்ட் சங்கம், கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய கருத்தரங்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். துணை முதல்வா் மு.மேகராஜன் முன்னிலை வகித்தாா். ரோட்டரி மாவட்டச் செயலா் எம்.கோபிநாத் வரவேற்றாா். போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன், பெண் குழந்தைகள் நல மாவட்டத் தலைவா் மருத்துவா் ஏஞ்சல் கிரேஸ்லெட் ஆகியோா் பெண் குழந்தைகள், பெண்களுக்கான பாதுகாப்புகள் குறித்து சிறப்புரையாற்றினா்.

கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கத் தலைவா் வி. குமரவேல், செயலா் ஆா்.சந்தோஷ், பொருளாளா் ஜெ.பிரதீப், சங்கப் பணி இயக்குநா் பி.கோமல்கிரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கல்லூரி ரோட்ராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளா்கள் கே.எஸ்.கருணா, கா.இலக்கியா, எம்.மோகனப்பிரியா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com