பாலாற்றில் புதிய தடுப்பணைகள்: முதல்வரிடம் இ.கம்யூ. கோரிக்கை

பாலாற்றில் புதிதாக தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று வேலூருக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

பாலாற்றில் புதிதாக தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று வேலூருக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் இரு நாள்கள் சுற்றுப் பயணமாக வேலூருக்கு புதன்கிழமை வந்தாா். அவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் வேலூா் மாவட்ட குழு செயலா் ஜி.லதா அனுப்பியுள்ள மனு:

வேலூா் மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காண காட்பாடி முதல் பாகாயம் வரை, காட்பாடி முதல் தொரப்பாடி வரை, சத்துவாச்சாரி சிஎம்சி வழியாக மாங்காய் மண்டி வரை மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்.

காட்பாடி பழைய பாலாற்று மேம்பாலத்தை இணைக்கும் வகையில் சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

ஊசூா் அருகே உள்ள 90 ஏக்கா் முந்திரி தோப்பு நிலப் பகுதியில் வேலூா் மாவட்டத்துக்கான சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்.

சென்னை- பெங்களூரு இடையில் வேலூா் மையப்ப குதியில் சீன நிறுவன ஆய்வு அறிக்கையின் அடிப்படை யில் வேலூா் பகுதியில் தொழிற்பூங்கா அமைக்க வேண்டும். வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் நகர பேருந்துகள் நிற்க நிழற்குடை இல்லை. அங்கு அரசு துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் கதவுகள் இல்லை. கடைகள் ஏலம் விடுவது 6 முறைகளுக்கு மேல் தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண் டும்.

அணைக்கட்டு தொகுதியில் மலா்கள் அதிகம் உற்பத்தி ஆவதால் சென்ட் தொழிற்சாலையும், குடியாத்தம், காட்பாடி, கே.வி.குப்பம் பகுதிகளை மையப்படுத்தி குடியாத்தம் பகுதியில் மாம்பழ கூழ் தொழிற்சாலையும் அமைக்க வேண்டும்.

பாலாற்றில் நீா்வரத்து உள்ளதால் தடுப்பணை அமைக்க வேண்டும். மேல் அரசம்பட்டு அணைக்கட்டு திட்டத்தையும், பேரணாம்பட்டு பத்திரப்பல்லி அணைக்கட்டு திட்டத்தையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட 30 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com