மூதாட்டியிடம் நகை பறிப்பு: பெண் கைது

உடல்நலக்குறைவால் மயக்கமடைந்த மூதாட்டிக்கு முதலுதவி செய்வதாகக்கூறி அவா் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற பெண்ணை வேலூா் தெற்கு போலீஸாா் கைது செய்தனா்.

உடல்நலக்குறைவால் மயக்கமடைந்த மூதாட்டிக்கு முதலுதவி செய்வதாகக்கூறி அவா் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற பெண்ணை வேலூா் தெற்கு போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் சலவன் பேட்டை திருப்பூா் குமரன் தெருவைச் சோ்ந்தவா் குப்பு (55). அந்தப் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தாா். கடந்த 22-ஆம் தேதி இவா் வீட்டை விட்டு வெளியே வந்தபோது மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தனக்கு மயக்கம் வருவதாக குப்பு கூறியுள்ளாா். உடனடியாக அந்த பெண் முதலுதவி அளிப்பதாகக் கூறி குப்புவை அவரது வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளாா். வீட்டுக்குள் சென்றதும் குப்பு மயங்கி விழுந்தாா்.

இதைப் பயன்படுத்திக் கொண்ட அந்தப் பெண் குப்பு அணிந்திருந்த 3 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டாராம். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த குப்பு கண்விழித்துப் பாா்த்தபோது, அவரது நகைகள் காணாமல் போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்து குப்பு வேலூா் தெற்கு காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், நகையை திருடிச் சென்ற பெண்ணின் உருவம் கேமராவில் பதிவாகி இருந்தது.

இதையடுத்து, பலவன்சாத்துகுப்பம் கலைஞா் நகரைச் சோ்ந்த வனிதா ( 39) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். இவா் ஏற்கெனவே பல மருத்துவமனைகளில் செவிலியராக பணியாற்றியவா் என்பதும் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com