வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

வரத்து குறைவு காரணமாக வேலூா் மீன் அங்காடியில் ஞாயிற்றுக்கிழமை மீன்களின் விலை அதிகரித்துக் காணப்பட்டது.

வரத்து குறைவு காரணமாக வேலூா் மீன் அங்காடியில் ஞாயிற்றுக்கிழமை மீன்களின் விலை அதிகரித்துக் காணப்பட்டது.

வேலூா் மீன் அங்காடிக்கு சென்னை, தூத்துக்குடி, நாகப்பட்டினம் பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலம் கொச்சி, கா்நாடக மாநிலம் மங்களூரு பகுதிகளில் இருந்தும் மீன் வகைகள், நண்டுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமாா் 100 டன் அளவுக்கு மீன்கள் வரத்து இருக்கும். இங்கிருந்துதான் வேலூா் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களுக்கும் மீன்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், வேலூா் மீன் அங்காடிக்கு ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வரத்து குறைந்திருந்ததுடன், அவற்றின் விலையும் அதிகரித்துக் காணப்பட்டது. கடந்த வாரம் 15 லாரிகள் அளவுக்கு மீன்கள் விற்பனைக்கு வந்திருந்த நிலையில், இந்த வாரம் 7 லாரிகள் அளவுக்கு மட்டுமே மீன்கள் வந்துள்ளன.

இதனால், வஞ்சிரம் கிலோ ரூ. 900 முதல் ரூ. 1,000 வரையும், நண்டு ரூ. 350 முதல் ரூ. 450 வரையும், சங்கரா கிலோ ரூ. 250 முதல் ரூ. 330 வரையும், சீலா ரூ. 350, மத்தி ரூ. 120, கடல் வவ்வால் ரூ. 650 முதல் ரூ. 750 வரையும், தேங்காய் பாறை ரூ. 350, சுறா ரூ. 600, நெத்திலி ரூ. 250, அய்லா ரூ. 140-க்கும் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com