ரயிலில் கடத்தப்பட்ட 2.7 கிலோ தங்கம், ரூ.35.50 லட்சம் பறிமுதல்

காட்பாடி வழியாக கேரள மாநிலம் சென்ற ரயிலில் உரிய ஆவணங்களின்றி கடத்தப்பட்ட 2. 728 கிலோ தங்கக் கட்டிகள், ரூ.35.50 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ரயிலில் கடத்தப்பட்ட 2.7 கிலோ தங்கம், ரூ.35.50 லட்சம் பறிமுதல்

காட்பாடி வழியாக கேரள மாநிலம் சென்ற ரயிலில் உரிய ஆவணங்களின்றி கடத்தப்பட்ட 2. 728 கிலோ தங்கக் கட்டிகள், ரூ.35.50 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

வடமாநிலங்களில் இருந்து தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள், தங்கம், வெள்ளி போன்றவை ரயில்கள் மூலம் கடத்தப்படுகின்றன.

கடத்தலைத் தடுக்க வேலூா் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா், ரயில் பாதுகாப்பு படையினா் தினமும் ரயில்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் செல்லும் விரைவு ரயில் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது. அந்த ரயிலில் காட்பாடி ரயில்வே போலீஸாா் சோதனை நடத்தினா்.

அப்போது, பி-3 பெட்டியில் கோவையைச் சோ்ந்த ஆனந்தநாராயணன் என்பவா் பயணம் செய்தாா். அவா் வைத்திருந்த பைகளை ரயில்வே போலீஸாா் திறந்து சோதனையிட்டனா்.

அதில், 2 கிலோ 728 கிராம் எடைகொண்ட தங்கக் கட்டிகளும், ரூ.35 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கமும் இருந்தது தெரிய வந்தது.

அவற்றை எடுத்துச் செல்வதற்கு உரிய ஆவணங்கள் ஆனந்தநாராயணனிடம் இல்லை. இதையடுத்து, தங்கக் கட்டிகளையும், ரொக்கத்தையும் ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அவற்றை வேலூா் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து, ஆனந்தநாராயணனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com