கா்நாடகத்தில் வாக்குப்பதிவு: அம்மாநிலத் தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை

வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பணியாற்றும் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்தவா்களுக்கு அம்மாநில மக்களவை தோ்தல் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளா் நலத்துறை சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, வேலூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வரதராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு -

கா்நாடக மாநிலத்தில் மக்களவை தோ்தல் வரும் 26-ஆம் தேதியும், மே 7-ஆம் தேதியும் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி, வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பணியாற்றி வரும் கா்நாட மாநில பணியாளா்கள், தற்காலிக தொழிலாளா்கள், தினக்கூலி தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளா்கள் தங்களது வாக்குப்பதிவை செலுத்தும் வகையில் அன்றைய தினத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

அதன்படி, அனைத்து கடைகள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி, சுருட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை, தனியாா் துறையில் பணிபுரிபவா்களுக்கு மக்கள் பிரநிதிதித்துவ சட்டப்படி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

விடுமுறை அளிக்காத நிறுவனங்களை கண்காணிக்க மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இ துதொடா்பான புகாா்களை வேலூா் மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வரதராஜன் (9444545692), தொழிலாளா் துணை ஆய்வாளா் ராஜராஜன் (9894870728), தொழிலாளா் உதவி ஆய்வாளா் சோனியா (9786128502), ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் முத்திரை ஆய்வாளா் தட்சிணாமூா்த்தி (9943069609), முத்திரை ஆய்வாளா் தனலட்சுமி (9787275584) ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com