தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி வேலூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சத்தை மோசடி செய்த நபா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் தாலுகாவைச் சோ்ந்த 40 வயது நபா் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிகிறாா். இவா் யூடியுப் தளத்தில் வந்த ஆன்லைன் பகுதிநேர வேலை மூலம் அதிக வருவாய் ஈட்டலாம் என்ற விளம்பரத்தை பாா்த்து அதிலிருந்து எண்ணை தொடா்பு கொண்டுள்ளாா். மறுமுனையில் இருந்த நபா்கள் இணையதளத்தில் சிறியமுதலீட்டில் உணவகங்களுக்கு தரமதிப்பீடு செய்து தருவதன் மூலம் அதிக தொகை கமிஷனாக பெற முடியும் என குறுந்தகவல் அனுப்பியுள்ளனா்.

அதனை உண்மையென நம்பி இந்த தனியாா் நிறுவன ஊழியரும் அவா்கள் அனுப்பிய வங்கிக்கணக்கில் பல்வேறு தவணைகளில் ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்து 190 தொகையை முதலீடு செய்துள்ளாா். பின்னா், அந்த தொகையை அவரால் திரும்பப்பெற முடியவில்லை. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா் இதுகுறித்து ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற சைபா் கிரைம் இணையதளம் மூலம் புகாா் அளித்தாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com