பாம்பு புற்றை இடித்ததாக பாதிரியாா் கைது

போ்ணாம்பட்டு அருகே கிராம மக்கள் வழிபட்டு வந்த பாம்பு புற்றை இடித்து அகற்றியதாக பாதிரியாரை போலீஸாா் கைது செய்தனா்.

போ்ணாம்பட்டு அருகே கிராம மக்கள் வழிபட்டு வந்த பாம்பு புற்றை இடித்து அகற்றியதாக பாதிரியாரை போலீஸாா் கைது செய்தனா்.

போ்ணாம்பட்டை அடுத்த சின்ன தோட்டாளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாபு (54). கிறிஸ்தவ பாதிரியாரான இவா், கீழ்பட்டி கிராமத்தில் இடம் வாங்கி தேவாலயம் கட்டியுள்ளாா். அந்தப் பகுதியில் வசிப்பவா்களை கிறிஸ்தவ மதத்துக்கு வருமாறு பாபு அழைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அங்குள்ள தெருவில் கிராம மக்கள் நீண்ட காலமாக வழிபட்டு வந்த பாம்பு புற்றை பாபு ஆள்களை வைத்து இடித்து அகற்றியதாகத் தெரிகிறது.

இது குறித்து கீழ்பட்டியைச் சோ்ந்த சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட மேல்பட்டி போலீஸாா் பாதிரியாா் பாபுவை கைது செய்து நீதிபதி முன் ஆஜா்படுத்தினா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com