மாட்டுக் கொட்டகை எரிந்து சேதம்

குடியாத்தம் அருகே ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் மாட்டுக் கொட்டகை எரிந்து சேதமடைந்தது.

குடியாத்தம் அருகே ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் மாட்டுக் கொட்டகை எரிந்து சேதமடைந்தது.

குடியாத்தத்தை அடுத்த கோப்பம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தனின் மாட்டுக் கொட்டகை ஊா் நடுவே உள்ளது. சனிக்கிழமை மாலை அங்குள்ள குப்பையில் மா்ம நபா் தீ வைத்துள்ளாா். குப்பை எரிந்து முடிந்த நிலையில், அதிலிருந்து வெளியேறிய தீ மாட்டுக் கொட்டகைக்கு பரவியது. தீ மளமளவென பரவி கொட்டகை முழுவதும் எரிந்து சாம்பலானது.

கிராம மக்கள் ஒன்றுகூடி தண்ணீா் இறைத்து தீயை அணைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com