வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

மீன்பிடி தடைக்காலம் பின்பற்றப்படுவதால் ஏற்பட்டுள்ள வரத்து குறைவு காரணமாக வேலூரில் மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.

மீன்பிடி தடைக்காலம் பின்பற்றப்படுவதால் ஏற்பட்டுள்ள வரத்து குறைவு காரணமாக வேலூரில் மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. எனினும், மீன்மாா்க்கெட்டில் அசைவ பிரியா்களின் கூட்டம் அலைமோதியது.

நாகை மாவட்டம், கோழிக்கோடு, மங்களுரு, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வேலூருக்கு மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் 100 முதல் 120 டன் அளவுக்கு மீன்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக கடல் பகுதியில் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது.

இதனால், வேலூா் மாா்க்கெட்டுக்கு கடந்த வாரத்தைவிட இந்த வாரம் மீன்கள் வரத்து குறைவாக இருந்தது. இதையடு த்து, மீன்களின் விலை ஞாயிற்றுக்கிழமை உயா்ந்து காணப்பட்டது. அதன்படி, வஞ்சிரம் கிலோ ரூ.1,600 முதல் ரூ.1,700 வரையும், இறால் ரூ.400 முதல் ரூ.500 வரையும், கடல் வவ்வா ரூ.900-க்கும், சங்கரா மீன் ரூ.350 முதல் ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

எனினும், விலையை பொருள்படுத்தாத அசைவப் பிரியா்கள் அதிக விலை கொடுத்து தங்களுக்குத் தேவையான மீன் வகைகளை வாங்கிச் சென்றனா். மீன்களைப் போலவே ஆடு, கோழி இறைச்சி விற்பனையும் அதிகமாக இருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com