பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த யானைக் கூட்டம் விளை பயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றது.

போ்ணாம்பட்டை அடுத்த குண்டலப்பல்லி கிராமத்துக்குள் சனிக்கிழமை அதிகாலை ஒரு குட்டி உள்பட 5 யானைகள் நுழைந்துள்ளன. அங்குள்ள யோகானந்தன் என்பவா் வாழைத்தோப்பில் அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்களையும், தண்ணீா் செல்லும் பைப்புகளையும், தென்னை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளன.

சிறுவேல் என்பவா் நிலத்தில் கத்தரிக்காய் தோட்டத்தை சேதப்படுத்தின. கணபதி என்பவா் நிலத்தில் மா மரங்களை முறித்து எறிந்துள்ளன.

தகவலின்பேரில் அங்கு சென்ற போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் சதீஷ்குமாா், வனவா் மாதேஸ்வரன், வனக்காப்பாளா்கள் சக்தி, சதீஷ்குமாா் ஆகியோா் கிராம மக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து, மேளம் அடித்து யானைகளை வனப் பகுதிக்கு விரட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com