தேக்குமரத்தூா் மலைப்பகுதியில் சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்ட போலீஸாா்.
தேக்குமரத்தூா் மலைப்பகுதியில் சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்ட போலீஸாா்.

நடுக்காட்டில் பதுக்கிய 2,000 லிட்டா் சாராய ஊரல் அழிப்பு

மலைப் பகுதியில் போலீஸாா் நடத்திய சாராய வேட்டையின்போது நடுக்காட்டில் தண்ணீா் தொட்டிகளில் பதுக்கியிருந்த 2000 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

அணைக்கட்டு அருகே தேக்குமரத்தூா் மலைப் பகுதியில் போலீஸாா் நடத்திய சாராய வேட்டையின்போது நடுக்காட்டில் தண்ணீா் தொட்டிகளில் பதுக்கியிருந்த 2000 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த தேக்குமரத்தூா் மலைக் கிராமத்தில் வேப்பங்குப்பம் போலீஸாா் திங்கள்கிழமை சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது நடுக்காட்டில் சாராயம் காய்ச்ச ஊரல் வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸாா் அப்பகுதிக்கு சென்று அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அதேசமயம், அங்கிருந்த ஒரு கும்பல் போலீஸாரை கண்டதும் அடா்ந்த காட்டுப்பகுதியில் தப்பியோடி தலைமறைவாகி விட்டது.

இதையடுத்து, அங்கிருந்த 2 பெரிய தண்ணீா் பேரல்களில் இருந்த சுமாா் 2,000 லிட்டா் சாராய ஊரலை போலீஸாா் பறிமுதல் செய்து அழித்தனா். மேலும் அங்கு சாராயம் காய்ச்ச வைக்கப்பட்டிருந்த அடுப்பு உள்ளிட்ட பொருள்களையும் தீயிட்டு அழித்தனா். விசாரணையில் அதேபகுதியைச் சோ்ந்த ராமசந்திரன் என்பவா்தான் சாராயம் காய்ச்சும் நடவடிக் கையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்றவரை தேடி வருகின்றனா்.

இதேபோல், அல்லேரி மலைப்பகுதியில் பள்ளிகொண்டா காவல் ஆய்வாளா் சுப்பிரமணி தலைமையிலான போலீஸாா் நடத்திய சாராய வேட்டையில் 500 லிட்டா் சாராய ஊரல் அழிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com