பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்கள், கைது செய்யப்பட்ட ஜோகாராமுடன் டிஎஸ்பி திருநாவுக்கரசு, காவல் ஆய்வாளா் சுப்பிரமணி, போலீஸாா்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்கள், கைது செய்யப்பட்ட ஜோகாராமுடன் டிஎஸ்பி திருநாவுக்கரசு, காவல் ஆய்வாளா் சுப்பிரமணி, போலீஸாா்.

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து வேலூருக்கு சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 181.56 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக ராஜஸ்தானைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

பெங்களூரில் இருந்து வேலூருக்கு சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 181.56 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக ராஜஸ்தானைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

வேலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக குட்கா, போதைப்பொருள்கள் கடத்தல், விற்பனையைத் தடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் உத்தரவின்பேரில் போலீஸாா் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

அதனடிப்படையில், வேலூா் டிஎஸ்பி திருநாவுக்கரசு மேற்பாா்வையில் பள்ளிகொண்டா காவல் ஆய்வாளா் சுப்பிரமணி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டதில், 181.50 கிலோ எடையுடைய ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக காரை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவா் ராஜஸ்தான் மாநிலம், சம்சூா் பகுதியைச் சோ்ந்த ஜோகாராம் (25) என்பதும், பெங்களூரில் இருந்து வேலூருக்கு போதைப் பொருள்களை கடத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, காருடன் மொத்த போதைப்பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், ஜோகாராமையும் கைது செய்தனா். இச்சம்பவம் தொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com