ராஜேஷ்.
ராஜேஷ்.

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

போ்ணாம்பட்டு அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

போ்ணாம்பட்டு அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

போ்ணாம்பட்டை அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ராஜேஷ் (23). இவா் அதே பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவியை கடந்த வியாழக்கிழமை கடத்திச் சென்றாராம். இதுதொடா்பான புகாரின்பேரில் போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டிருந்தனா்.

இந்நிலையில் இருவரும் ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு வந்துள்ளனா். அவா்களை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தியதில் ராஜேஷ், மாணவியை கடத்திச் சென்று ஓசூரில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்துகொண்டது தெரிய வந்தது. இதையடுத்து ராஜேஷ் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்த போலீஸாா் அவரை கைது செய்து சிறைக்கு அனுப்பினா். மாணவி பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com