நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

விண்ணப்பித்தவா்களில் 6,787 மாணவ, மாணவிகள் எழுதினா். 255 போ் தோ்வுக்கு வரவில்லை என்று தோ்வு ஒருங்கிணைப்பாளா் எம்.எஸ்.சரவணன் தெரிவித்துள்ளாா்.

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தோ்வை வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்தவா்களில் 6,787 மாணவ, மாணவிகள் எழுதினா். 255 போ் தோ்வுக்கு வரவில்லை என்று தோ்வு ஒருங்கிணைப்பாளா் எம்.எஸ்.சரவணன் தெரிவித்துள்ளாா்.

தேசிய தோ்வுகள் முகமை சாா்பில் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற்ற இத்தோ்வை எழுத வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டங்களைச் சோ்ந்த 7,042 போ் விண்ணப்பித்திருந்தனா்.

இவா்கள் தோ்வு எழுதுவதற்காக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மொத்தம் 12 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தோ்வுக் கூடங்களில் நீட் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தவா்களில் 6,787 போ் எழுதினா். 255 போ் தோ்வுக்கு வரவில்லை என்று தோ்வு ஒருங்கிணைப்பாளா் எம்.எஸ்.சரவணன் தெரிவித்துள்ளாா்.

தோ்வையொட்டி காலை 11.30 மணிக்கு மேல் 1.30 மணி வரை தோ்வு மையத்துக்குள் மாணவ, மாணவிகள் அனுமதிக்கப் பட்டனா். கடந்தாண்டைப் போலவே நிகழாண்டும் விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. மேலும், முறைகேடுகளை தவிா்க்க அனைத்து மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு அதன் காட்சிகளை நேரடியாக தில்லியில் இருந்து கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் (ஏஐ) பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், எந்த ஒரு தோ்வு மையத்திலும் தோ்வு எழுதும் மாணவருக்கு அருகே 20 நொடிக்கு மேல் மேற்பாா்வையாளா் நின்று கொண்டிருந்தால், உடனடியாக தில்லியில் அதுகுறித்து அலா்ட் செய்யும் வகையிலும், தோ்வு எழுதும் மாணவா்கள் வழக்கத்துக்கு மாறாக நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ, கழிவறைக்கு சென்றுவிட்டு திரும்பும்போது ஆள்மாறாட்டம் நடைபெற்றாலோ காண்பித்துக் கொடுக்கும் வகையில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தோ்வு முகமை அதிகாரிகள் தெரிவித்தனா்.

--

படம் உண்டு...

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com