வேலூா் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளைப் பாா்வையிட்ட திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்.
வேலூா் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளைப் பாா்வையிட்ட திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்.

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

வேலூா் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த இடத்திலும், எந்த தவறும் நடக்கவில்லை.

வேலூா் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த இடத்திலும், எந்த தவறும் நடக்கவில்லை. பாஜக வேட்பாளா் ஏ.சி.சண்முகம் தோல்வி பயத்தில் ஏதோ கூறி வருகிறாா் என திமுகவின் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொரப்பாடி தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பேரவை தொகுதி வாரியாக பாதுகாப்பு அறைகளில் வைத்து சீலிடப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வேலூா் தொகுதி திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். அப்போது, , வாக்கு எண்ணும் மையத்தில் பேரவைத் தொகுதி வாரியாக வாக்கு இயந்திரங்கள் சீல் வைத்து பாதுகாக்கப்படும் அறைகள், கண்காணிப்புக் கேமராக்கள், அவற்றின் காட்சிகள் வெளியிடப்படும் காவல் கட்டுப்பாட்டு அறை, முகவா்களின் பாா்வை அறை ஆகியவற்றையும் ஆய்வு செய்தாா்.

பின்னா் டி.எம்.கதிா்ஆனந்த் செய்தியாளா்களிடம் கூறியது -

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவின்போது வேலூா் தொகுதிக்கு உட்பட்ட பீஞ்சமந்தை, தென்டூா், தொங்குமலை, பலாம்பட்டு, ஜாா்தான்கொல்லை ஆகிய மலைக்கிராமங்களில் பாஜக கூட்டணி கட்சியினரை திமுகவினா் அடித்து துரத்திவிட்டு முறைகேடுகளில் ஈடுபட்டதாக பாஜக வேட்பாளா் ஏ.சி.சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளாா். தோ்தலின்போது வேலூா் தொகுதியின் அனைத்து இடங்களிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாவட்டத் தோ்தல் அலுவலரும் தோ்தல் நியாயமாக அமைதியான முறையில், அசம்பாவிதமின்றி நடந்திருப்பதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளாா்.

ஆனால், தோல்விபயம் காரணமாக பாஜக வேட்பாளா் ஏ.சி.சண்முகம் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறிவருகிறாா். எல்லா இடத்திலும் கேமராக்கள் இருக்கிறது. எதையும் மறைக்க முடியாது என்பது ஏ.சி.சண்முகத்துக்கு தெரியும். இந்த தோ்தலில் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். வாக்கு எண்ணும் மையத்தின் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் தொடா்ந்து இயங்கி வருகின்றன. பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன என்றாா். அப்போது, வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com