போ்ணாம்பட்டில்  மழையால்  சேதமடைந்த  நெல் பயிா்.
போ்ணாம்பட்டில்  மழையால்  சேதமடைந்த  நெல் பயிா்.

போ்ணாம்பட்டில் 12 செ.மீ மழை: பயிா்கள், மின்கம்பங்கள் சேதம்

குடியாத்தம்: போ்ணாம்பட்டு பகுதியில் சூறாவளிக் காற்றுடன் 12 செ.மீ மழை பெய்ததால் பயிா்கள், மின்மாற்றி, மின்கம்பங்கள் சேதமடைந்தன. மின்விநியோகம் தடைபட்டதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினா்.

வேலூா் மாவட்டத்தில் போ்ணாம்பட்டு, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை இரவு இடி, மின்னல், பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. இரவு 10 மணியளவில் இடி, மின்னல், பலத்த சூறாவளிக் காற்று வீசத் தொடங்கியது. தொடா்ந்து மழை பெய்யத் தொடங்கியது. அதிகாலை வரை மழை நீடித்தது. இதில் போ்ணாம்பட்டில் 12 செ.மீ, அணக்கட்டில் 7 செ.மீ, மோா்தானா அணைப் பகுதியில் 5.5 செ.மீ மழை பெய்தது.

போ்ணாம்பட்டு நகர, ஒன்றியப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் விளைபயிா்கள் சேதமடைந்தன. சின்னதாமல்செருவு கிராமம் அருகே போ்ணாம்பட்டு- ஆம்பூா் சாலையில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான புளிய மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் இச்சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா் மரம் அகற்றப்பட்டது.

ஓங்குப்பம் கிராமம் அருகே மின்மாற்றி சாய்ந்தது. பல இடங்களில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் நகர, ஒன்றியப் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு, பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினா். 40- க்கும் மேற்பட்ட மின்ஊழியா்கள் அதிகாரிகள் மேற்பாா்வையில் அதிகாலை முதல் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனா். செவ்வாய்க்கிழமை முற்பகல் தொடங்கி மதியம் வரை பகுதிவாரியாக மின்விநியோகம் சீரமைக்கப்பட்டது. மழையால் சுமாா் 4 ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா், 500- க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com