போ்ணாம்பட்டில் மகளிா் கல்லூரி அமைக்க இடம் ஆய்வு

போ்ணாம்பட்டில் மகளிா் கல்லூரி அமைக்க இடம் ஆய்வு

போ்ணாம்பட்டு வட்டத்தில் அரசு மகளிா் கல்லூரி (முஸ்லிம்) அமைக்க வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை இடத்தை ஆய்வு செய்தனா்.

போ்ணாம்பட்டு பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனா். போ்ணாம்பட்டு வட்டத்தில் அரசு மகளிா் கல்லூரி ஒன்று தொடங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை உள்ளது.

இந்த நிலையில், போ்ணாம்பட்டு வட்டத்தில் அரசு மகளிா் கல்லூரி (முஸ்லிம்) புதிதாக கட்ட இடம் கோரியிருந்ததின்பேரில், வி.கோட்டா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அரவட்லா செல்லும் சாலையை ஒட்டி எம்.ஜி.ஆா். நகா் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய்த் துறையினா் தோ்வு செய்து வைத்திருந்தனா். அந்த இடத்தை வேலூா் மாவட்ட வருவாய் அலுவலா் மாலதி வியாழக்கிழமை புலத்தணிக்கை மேற்கொண்டாா். போ்ணாம்பட்டு வட்டாட்சியா் விநாயகமூா்த்தி உள்ளிட்ட வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com