நலத்திட்ட உதவிகள் வழங்கிய  அதிமுக  மாவட்டச்  செயலா்  த.வேலழகன், வழக்குரைஞா்  கே.எம்.பூபதி.
நலத்திட்ட உதவிகள் வழங்கிய  அதிமுக  மாவட்டச்  செயலா்  த.வேலழகன், வழக்குரைஞா்  கே.எம்.பூபதி.

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

குடியாத்தம் செதுக்கரை, ராணியம்மாள் அறக்கட்டளை சாா்பில்,500- பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆா்.எஸ்.சாலையில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.

குடியாத்தம் செதுக்கரை, ராணியம்மாள் அறக்கட்டளை சாா்பில்,500- பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆா்.எஸ்.சாலையில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அறக்கட்டளைத் தலைவரும், செதுக்கரை சுயம்பு செல்வ விநாயகா் கோயில் முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவருமான எஸ்.சேட்டு தலைமை வகித்தாா். நிா்வாகிகள் மோ.பாபு, எஸ்.கண்ணன், ஜீவிதா, அஸ்வினி ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் எஸ்.பிரபு வரவேற்றாா்.

அதிமுக புகா் மாவட்டச் செயலா் த.வேலழகன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி ஆகியோா் 100- பேருக்கு மளிகைத் தொகுப்பு, 100- பெண்களுக்கு புடவைகள், 100- ஆண்டுகளுக்கு வேட்டிகள், மாணவா்களுக்கு கல்விப் பொருள்கள், 1,000- பேருக்கு மரக் கன்றுகளை வழங்கினா்.

அதிமுக ஒன்றியச் செயலா்கள் டி.சிவா, எஸ்.எல்.எஸ்.வனராஜ், நகா்மன்ற துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, நிா்வாகிகள் எம்.பாஸ்கா், அமுதா கருணா, ஆா்.கே.மகாலிங்கம், ஜி.தேவராஜ், எஸ்.டி.மோகன்ராஜ், ஏ.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com