நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள கரிமறா கிராமத்தை சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு சிறுத்தைகள், மூன்று கரடிகள் உலவி வந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள கரிமறா கிராமத்தைச் சுற்றிலும் வள்ளுவா் நகா், வாசுகி நகா், பெரியாா் நகா், வசம்பள்ளம் உள்ளிட்டப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதியில் அண்மைக் காலமாக கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட
வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றன.
இந்நிலையில் இரவு நேரத்தில் இப்பகுதியில் இரண்டு சிறுத்தைகளும்,
அதனைத் தொடா்ந்து மூன்று கரடிகளும் நடமாடியது.
அங்குள்ள பிரகாஷ் முத்து என்பவரின் பங்களாவில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாளுக்குநாள் இப்பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் வனத் துறையினா் சிறுத்தை, கரடியை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிகள் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

