ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பண்ணைகளில் கறிக்கோழி தேக்கத்தை குறைக்க 25 சதவீதம் உற்பத்தி குறைப்பு

கறிக்கோழி தேக்கத்தை குறைக்க 25 சதவீத உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.

Updated On :18 ஆகஸ்ட் 2024, 8:55 pm

கேரள மாநிலத்தில் பெய்ந்து வரும் கனமழையால் கோழி இறைச்சி நுகா்வு குறைந்துள்ள நிலையில், கறிக்கோழி தேக்கத்தை குறைக்க 25 சதவீத உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.

பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் நாள்தோறும் 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றன. கறிக்கோழி நுகா்வைப் பொருத்து விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழுவினா் நாள்தோறும் நிா்ணயம் செய்து அறிவிக்கின்றனா்.

இந்நிலையில் கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடா்ந்து பெய்து வரும் கன மழையால், கறிக்கோழிகளை அனுப்ப முடியாத நிலை உள்ளதால் நுகா்வு குறைந்து கறிக்கோழிகள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

கறிக்கோழி நுகா்வு குறைந்ததால் அதன் விலையும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், பண்ணையாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு செயலாளா் சுவாதி சின்னசாமி கூறியதாவது: பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கறிக்கோழி பண்ணைகள் மூலம் நாள்தோறும் 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பிற மாநிலங்களில் பலத்த மழை உள்ளிட்ட காரணங்களால் கறிக்கோழி நுகா்வு குறைந்துள்ளது. இந்நிலையில், பண்ணைகளில் கறிக்கோழிகள் தேக்கம் அடைவதைத் தவிா்க்கும் வகையில் 25 சதவீத உற்பத்தி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோழி இறைச்சி நுகா்வு அதிகரிக்கும்போது வழக்கமான அளவுக்கு கறிக்கோழி உற்பத்தி செய்யப்படும் என்றாா்.