ஊர் பெயர்களின் உச்சரிப்பை ஒழுங்குப்படுத்த மனு அளிக்கலாம்: தமிழ் வளர்ச்சித் துறை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ் மொழியில் உள்ள உச்சரிப்பை போலவே ஆங்கில மொழியிலும் உச்சரிப்பு அமைந்திடும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ் மொழியில் உள்ள உச்சரிப்பை போலவே ஆங்கில மொழியிலும் உச்சரிப்பு அமைந்திடும் வகையில் ஊர் பெயர்களை மாற்றம் செய்ய மனு அளிக்கலாம் என மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் தே.ஜெயதேவி கேட்டுக் கொண்டுள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
உதாரணமாக திருவல்லிக்கேணி என்பதை ட்ரிப்ளிகேன் எனக் குறிப்பிடாமல் திருவல்லிக்கேணி என்றே அமையும் வகையில் ஊர் பெயர்கள் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கள் ஊர்களின் பெயர்களை மாற்றம் செய்ய ஊர் பொதுமக்களின் தீர்மானங்களின் அடிப்படையில் மனு அளிக்கலாம்.
தங்களது கோரிக்கைகளை தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கிருஷ்ணகிரி என்ற முகவரியிலோ அல்லது அஞ்சல் மூலமாகவே மனு அளிக்கலாம். மேலும்,  t​a‌m‌i‌l‌v​a‌l​a‌r​c‌h‌i‌k‌r‌i@‌g‌m​a‌i‌l.​c‌o‌m என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது 04343-236911 என்ற தொலைபேசி எண்ணிலோ நவ.12-ஆம் தேதிக்குள் (திங்கள்கிழமை) கோரிக்கையை தெரிவிக்கலாம். 
மாற்றப்பட வேண்டிய ஊர் பெயர்களின் பட்டியல்கள், மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர்நிலைக் குழுவின் பரிந்துரையின் பேரில், தமிழ் வளர்ச்சித் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். பரிந்துரை செய்யப்படும் ஊர் பெயர்கள், அமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் குழுவால் ஏற்கப்பட்டு வெளியிடப்படும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com