வாழையில் நோய் தாக்குதல் செயல்விளக்கம்

கீழ் பையூர் கிராமத்தில், வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையம் சார்பில் வாழையில் நூற்புழு, வாடல் நோய் தாக்குதல்

கீழ் பையூர் கிராமத்தில், வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையம் சார்பில் வாழையில் நூற்புழு, வாடல் நோய் தாக்குதல் குறித்து  வேளாண் பல்கலைக்கழக மாணவியர் அண்மையில் செயல் விளக்கம் அளித்தனர்.
கிராமத் தங்கல் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வாழையில் நூற்புழு, வாடல் நோயின் அறிகுறிகளை விளக்கினர். மேலும், அவற்றை கட்டுப்படுத்தும் முறைகளை செயல்விளக்கம் செய்து காட்டினர். அதன்படி, நோய் தாக்குதல் இல்லாத 1.5 முதல் 2 கிலோ எடையுள்ள ஈட்டிக் கன்றுகளை தேர்வு செய்து, அழுகிய நிலையில் உள்ள தோல்களை வெட்டி அகற்ற வேண்டும். 
பின்பு, தோல் சீவிய கன்றுகளை கார்பன்டம்சிம் என்ற மருந்தில்  நனைத்து, பத்து நிமிடங்கள் உலர வைத்த பின் சேற்றுக் குழம்பில் நனைத்து, அதன் மீது கார்போபுயூரான் குருனை மருந்தை ஒரு கிழங்கிற்கு 40 கிராம் என்ற விகிதத்தில் தூவி விட வேண்டும். இதையடுத்து, நிழலில் 24 மணி நேரம் உலர வைத்து பின்னர் நடவு செய்ய வேண்டும். 
இவ்வாறு செய்வதன் மூலம் நூற்புழு, வாடல் நோய் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு, மகசூல் அதிகரிக்கும். மேலும், விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு வேளாண் பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com