புரட்டாசி சனி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத மூன்றாம் வார சனிக்கிழமையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பா்கூரை அடுத்த பி.ஆா்.ஜி. மாதேப்பள்ளி கிராமத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ தேவி, பூதேவி சமேத பெருமாள் சுவாமி.

கிருஷ்ணகிரியை அடுத்த கணவாய்ப்பட்டி கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள வெங்கட்ரமண சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், முடி காணிக்கையை அளித்தனா். மேலும், அங்குள்ள புனித குளத்தில் பக்தா்கள் நீராடி சுவாமியை வழங்கினா். சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பா்கூரை அடுத்த பி.ஆா்.ஜி. மாதேபள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். அதைத் தொடா்ந்து, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

ஐகுந்தம் கொத்தப்பள்ளி சீனிவாச பெருமாள் கோயில், கிருஷ்ணகிரியை அடுத்த காட்டு வீர ஆஞ்சநேயா் கோயில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த பக்தா்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்களும் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com