தமிழகத்தில் ஆட்சி தொடர அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்: ஜி.கே.மணி

தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான ஆட்சி தொடர ஒசூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ஜோதிக்கு ஆதரவு அளிக்க

தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான ஆட்சி தொடர ஒசூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ஜோதிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார். 
ஒசூரில் பாமக நிர்வாகிகள் கூட்டம் மாவட்டப் பொறுப்பாளர் அருண்ராஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் எஸ்.ஜோதியை அறிமுகப்படுத்தி ஜி.கே.மணி பேசியது:  தமிழகத்தில் அதிமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.  மேலும்,  ரூ.60 ஆயிரம் கோடியில் கோதாவரி-காவிரி ஆறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். 
அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் பாலாறு, தென்பெண்ணை, காவிரி,  வைகை உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் இணைக்கப்பட்டு, விவசாயம் செழிக்கும்.  மேலும்,  குடிநீர்ப் பிரச்னை தீரும்,  உணவு உற்பத்தி அதிகரிக்கும். 
தமிழகத்தில் நடைபெறும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில்,  8 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு அதிகளவில் உள்ளது. அதில் ஒசூர் தொகுதியும் முக்கியமானது  என்றார்.
இந்தக் கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணா ரெட்டி,  அதிமுக வேட்பாளர் எஸ்.ஜோதி,  பாமக முன்னாள் மாவட்டச் செயலர் முனிராஜ்,  ஹோஸ்டியா தலைவர் வேல்முருகன்,  முன்னாள் தலைவர் நம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com