பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரியால் இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி: சிபிஐ மாநிலச் செயலர் முத்தரசன்

இந்தியாவில் பாஜக அரசு மேற்கொண்ட பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் இந்தியாவின் பொருளாதாரம்

இந்தியாவில் பாஜக அரசு மேற்கொண்ட பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் தெரிவித்தார்.
ஒசூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.ஏ.சத்யா மற்றும் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார் ஆகியோரை ஆதரித்து ஒசூரில் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்த முத்தரசன் தெருமுனைப் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியது:  இந்தியா மிகப் பெரிய பொருளாதாரம் மிக்க நாடாகும். யாருடை ஆலோசனையும் பெறாமல், யாருக்கும் தெரியாமல் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 ஆகியவற்றை செல்லாது என இரவோடு இரவாக மோடி அறிவித்தார்.  இதனால் வங்கியில் நின்ற 100-க்கும் மேற்பட்ட ஏழை மக்கள் உயிரிழந்தனர். நடுத்தர மக்கள் தங்களுடைய பணிகளை எல்லாம் விட்டுவிட்டு  வங்கியில் நீண்ட வரிசையில் ரூ.2 ஆயிரம் நோட்டுக்காக காத்திருந்தனர்.  ஆனால்,  அன்றைய தினமே ஆந்திர தொழில் அதிபர் சேகர் ரெட்டியின் சென்னை வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணத்தை வருமான வரித் துறையினர் கைப்பற்றினர்.
இந்த பண மதிப்புழப்பு நடவடிக்கையால் இந்தியாவின் பொருளாதாரம் இன்னும் வளர்ச்சிப் பாதைக்குச் செல்லவில்லை. அதேபோன்று ஜி.எஸ்.டி.  வரி விதிப்பால் இந்தியா முழுவதிலும் உள்ள 80 சதவீதம் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் மூடும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டன.
சென்னை, கோவை, திருப்பூர், அம்பத்தூர், ஈரோடு, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, ஒசூர் உள்ளிட்ட தமிழகத்தில் செயல்பட்டு வந்த பல ஆயிரம் சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டு, பல லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர் என்றார்.  
ஒசூர் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஏ.சத்யா, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார், தளி முன்னாள் எம்.எல்.ஏ. டி.ராமச்சந்திரன், விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் லகுமைய்யா, வேப்பனஅள்ளி தொகுதி எம்.எல்.ஏ. பி.முருகன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் காசிலிங்கம் உள்ளிட்டோர் அவருடன் வாக்குச் சேகரித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com