நாட்டுத் துப்பாக்கி கைப்பற்றல்
By DIN | Published On : 26th April 2019 03:05 AM | Last Updated : 26th April 2019 03:05 AM | அ+அ அ- |

தளி அருகே கேட்பாரற்றுக் கிடந்த நாட்டுத் துப்பாக்கியை போலீஸார் கைப்பற்றினர்.
தளி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகேசன் மற்றும் போலீஸார் கூமன்தொட்டி வனப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கேட்பாரற்ற நிலையில் ஒரு நாட்டுத் துப்பாக்கி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.