யானை தூக்கி வீசியதில் விவசாயி பலி

ஒசூர் அருகே யானை தூக்கி வீசி விவசாயி உயிரிழந்தார். ஒசூர் அருகே பாகலூரில் கடந்த சில நாள்களாக 2 யானைகள் முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன.

ஒசூர் அருகே யானை தூக்கி வீசி விவசாயி உயிரிழந்தார். ஒசூர் அருகே பாகலூரில் கடந்த சில நாள்களாக 2 யானைகள் முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன.
கெலவரப்பள்ளி அணையில் சில நாள்கள் தங்கி இருந்த இந்த யானைகள் பெலத்தூர், சித்தனப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் பயிர் செய்திருந்த கரும்பு ராகி, தக்காளி, பூந்தோட்டங்களைச் சேதப்படுத்தின.
இந்த யானைகளை வனத்துறையினர் கர்நாடக மாநிலத்துக்கு விரட்டினர். ஆனால், மறுநாளே கெலவரப்பள்ளி அணைக்கு 2 யானைகளும் திரும்பி வந்ததால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்த யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இந்த இரு யானைகளையும் வனத்துறையினர் சித்தனப்பள்ளியில் இருந்து செவ்வாய்க்கிழமை கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒசூர் அருகே தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த, கர்நாடக மாநிலம் திருரங்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அன்னையப்பாவை யானை தும்பிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்தது. இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். கர்நாடக மாநில போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com