பயறு வகை பயிர்களில் மதிப்பு கூட்டுதல் பயிற்சி

ஊத்தங்கரை வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் கோவிந்தாபுரம் கிராமத்தில் பயறு வகை பயிர்களில் மதிப்பு கூட்டுதல் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரை வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் கோவிந்தாபுரம் கிராமத்தில் பயறு வகை பயிர்களில் மதிப்பு கூட்டுதல் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) எ.சண்முகம் தலைமை வகித்து பேசினார். வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவர் சுந்தர்ராஜன் பயறு வகைப் பயிர்களில் அறுவடைக்கு பிந்தைய செய்நேர்த்தி மற்றும் மதிப்பு கூட்டுதல் பற்றி குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.
 வேளாண் துறை சார்ந்த மானியங்கள், படைப்புழு கட்டுப்பாடு குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) பிரபாவதி எடுத்துரைத்தார். பயறு வகை சாகுபடி, தொழில்நுட்பம் குறித்து வேளாண்மை அலுவலர் உழவர் பயிற்சி நிலையம் பன்னீர்செல்வம் கூறினார். ஊத்தங்கரை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ், உயிர் உரங்களைப் பயன்படுத்தும் முறைகள் அதன் நன்மைகள் மற்றும் அட்மா திட்டங்கள் குறித்து விளக்கினார். இதில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். உதவி தொழில்நுட்ப மேலாளர் பவித்ரா நன்றி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com